Jul 16, 2014

கலெக்டர் அலுவலகத்தில் கலப்பட பொருட்களை கண்டறியும் செயல்விளக்க கண்காட்சி டிஆர்ஓ தொடங்கி வைத்தார்



வேலூர், ஜூலை 16:
கலெக்டர் அலுவலகத்தில் கலப்பட பொருட்களை கண்டறியும் செயல்விளக்க கண்காட்சியை டிஆர்ஓ பலராமன் தொடங்கி வைத்தார்.
உலக நுகர்வோர் பாதுகாப்பு தினவிழாவையொட்டி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலப்பட பொருட்களை கண்டறியும் செயல்விளக்க கண்காட்சி நேற்று நடந்தது. இதை டிஆர்ஓ பலராமன் தொடங்கி வைத்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் பிச்சைமணி, கல்லூரிகள் இணை இயக்குநர் ஜெயராஜ், கூட்டுறவு சங்க இணைபதிவாளர் வெங்கடேசன், உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் கொளஞ்சி, சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் ‘நுகர்வோர்கள் கடமைகளும்’ என்ற தலைப்பில் கவிதை, கட்டுரை மற்றும் ஓவியபோட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு டிஆர்ஓ பலராமன் பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து கலப்பட பொருட்களை கண்டறியும் செயல்விளக்க கண்காட்சியை டிஆர்ஓ தொடங்கி வைத்தார். இதில் டீத்தூள், தேன், மிளகில் பப்பாளி விதை, காலாவதியான பொருட்கள் போன்றவை வைக்கப்பட்டிருந்தன. தண்ணீரில் விட்டு சுத்தமான தேனை கண்டறிவது, அதேபோல் தண்ணீரில் டீத்தூளை போட்டு தரமான டீத்தூளை கண்டறிவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment