Jul 2, 2014

அரசு விதிகளை பின்பற்றி ஜவ்வரிசி தயாரிக்க முடிவு


சேந்தமங்கலம், ஜூலை 2:
நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டியை தலைமையிடமாக கொண்டு சுமார் 50க்கும் மேற்பட்ட சேகோ, ஸ்டார்ச் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
இங்கு தயாரிக்கப்படும் ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஜவ்வரிசி உற்பத்தியில் உணவு பாதுகாப்பு விதிமுறையை பின்பற்றாமல் மக்காச்சோளம் மற்றும் ரசாயன பொருட்கள் கலந்து தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையெடுத்து ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சுற்றுப் பகுதியில் உள்ள அனைத்து சேகோ தொழிற்சாலையிலும் அரசின் விதிகளை பின்பற்றி மரவள்ளி கிழங்கின் தோலை உரித்து பயன்படுத்த வேண்டும்.
மேலும், மக்காச்சோளம் மற்றும் ரசாயன பொருட்களை கலப்படம் செய்யாமல் ஜவ்வரிசி தயாரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதேபோல், நுகர்வோருக்கு தரமான உணவு வழங்க சேலம் சேகோ சர்வ் மூலமாக ஜவ்வரிசி விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment