Jun 4, 2014

ஏற்காடு கோடை விழாவில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் சிறப்பு ஸ்டால்

சேலம், ஜூன் 4
ஏற்காடு கோடை விழாவில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் சிறப்பு ஸ்டால் அமைக்கப்பட உள்ளது.
ஏற்காடு கோடை விழா வரும் 7 (சனிக்கிழமை) மற்றும் 8 (ஞாயிற்றுகிழமை) ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி ஏற்காட்டில், சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் சிறப்பு ஸ்டால் அமைக்கப்பட உள்ளது.
இதில், எந்தெந்த பொருட்களில் எவ்வாறு கலப்படம் செய்யப்படுகிறது? கலப்படம் செய்யப்பட்ட உணவு பொருட்களை எப்படி கண்டறிவது? என்பது குறித்து பொது மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது. வீடுகளில் பயன்படுத்தும் பால், டீத்தூள், சர்க்கரை, வெல்லம், ஜவ்வரிசி, தேன் உள்ளிட்ட முக்கிய உணவு பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டிருந்தால், அதை எப்படி கண்டறிவது என்பது குறித்து அதிகாரிகள் தெளிவுபடுத்த உள்ளனர். மேலும், பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட உள்ளன.
இந்த ஸ்டால் மூலம் கலப்பட பொருட்களை கண்டறிவதற்கான விழிப்புணர்வை மேம்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment