Jun 5, 2014

திருப்போரூரில் கடைகளில் பதுக்கி விற்ற குட்கா பொருட்கள் பறிமுதல்

திருப்போரூர், ஜூன் 5:
காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெகன்நாதன் உத்தரவுப்படி திருப்போரூரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுகிறதா என்பது குறித்து திடீர் சோதனை நடந்தது.
திருப்போரூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, மதுராந்தகம் உணவு பாதுகாப்பு அலுவலர் துரை ஆகியோர் திருப்போரூர் பஸ் நிலையம், குளக்கரை, இள்ளலூர் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பான்மசாலா, குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர்களிடம் கூறியதாவது, புற்றுநோயை உருவாக்கும் பான்மசாலா, குட்கா போன்ற பொருட்களுக்கு 2015 மே மாதம் வரை தடை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, பல்வேறு கடைகளில் திடீர் சோதனை நடத்தி, பொருட்களை கைப்பற்றி வருகிறோம். எங்கள் எச்சரிக்கையை மீறி விற்பனை செய்தால், உணவு பாதுகாப்பு தடை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment