Jun 5, 2014

காவேரிப்பட்டணத்தில் சோதனை காலாவதி குளிர்பானங்கள் புகையிலை பொருட்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி, ஜூன் 5:
காவேரிப்பட்டணத்தில் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ராஜேஷ் உத்தரவின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கலைவாணி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் துளசிராமன், சாமிநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் காவேரிப்பட்டணத்தில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள குளிர்பான கடைகளில் ஆய்வு செய்தபோது, காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, அதனை பறிமுதல் செய்து அழித்தனர். நேற்று ஒரு நாளில் மட்டும் காவேரிப்பட்டணத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான குளிர்பானங்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
இதேபோல் பல்வேறு பெட்டி கடைகளில் நடத்திய சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் பான்மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, ரூ.10 ஆயிரம் மதிப்பிலான புகையிலை மற்றும் பான்மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் காலாவதியான குளிர்பானங்களை விற்பனை செய்தாலோ, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான்மசாலா பொருட்களை விற்பனை செய்தலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

1 comment:

  1. காலாவதியாகும் உணவு பொருட்களை விற்பனையில் இருந்து அகற்ற உற்பத்தியாளரும் , விற்பனையாளரும் கண்காணிக்கும் முறை அமுல் படுத்த வேண்டும் . நுகர்வோர் வாங்கும் முன் காலாவதி தேதி பார்க்க வேண்டும்.அமுலாக்க பிரிவு அளிப்பதுடன், அபராதம் விதிக்கலாம் . மீண்டும் தொடர்ந்தால் உரிமம் ரத்து செய்யலாம்

    ReplyDelete