Jun 20, 2014

உப்பு உற்பத்தியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்



வேதாரண்யம், ஜூன் 19:
நாகை மாவட்டம் வேதாரண்யம் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் உப்பு உற்பத்தியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கோதண்டபாணி, ஆண்டனி, மகாராஜன், பிரவின், உப்புத்துறை கண்காணிப்பாளர் நாயர் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில், உப்பில் அயோடின் கட்டாயமாக கலக்க வேண்டும் என்றும். உப்பளப்பகுதியில் ரோடு ஓரத்தில் உப்பு பாக்கெட்டுகள் போடுவதை நிறுத்தி தனியாக செட் அமைத்து அதில் வைத்து பேக்கிங் செய்ய வேண்டும். தொற்று நோய் உள்ளவர்களை வைத்து உப்பு பாக்கெட் போடக் கூடாது. பாக்கெட் போடுபவர்கள் கையுறை மற்றும் கண்ணாடி அணிய வேண்டும். என்றும் அறிவுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment