Nov 23, 2013

ஜவ்வரிசியில் ரசாயன பொருட்கள் கலப்பு ஆய்வுக்கு சென்ற அதிகாரிக்கு மிரட்டல்



ஆத்தூர், நவ.22:
ஆத்தூர் தலை வாசல் உள்ளிட்ட பகுதியில் ஏரா ளமான மரவள்ளி கிழங்கு மாவு மற்றும் ஜவ்வரிசி உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் ஜவ்வரிசி வெண்மை நிறமாக வருவதற்காக ரசாயன பொருட்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் அனுராதா தலைமையில் உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் கோவிந்தராஜு, சுந்தரராஜு, புஷ்பராஜ், முனுசாமி, சிங்காரவேல், இளங்கோவன், சந்திரசேகர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆத்தூர் ஜவ்வரிசி ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தயாரிக்கப்பட்ட ஜவ்வரிசிகளின் மாதிரிகளை பரிசோதனைக்காக சேகரித்தனர்.
இதில் பைத்தூர் சாலையில் உள்ள சதன் ஜவ்வரிசி ஆலைக்கு சென்று ஆய்வு மேற்க்கொண்டு மாதிரியை சேகரித்த போது அங்கிருந்த ஆலை கணக்காளர் உள்ளிட்ட பணியாளர்கள் மாதிரி சேகரிப்பதற்கு உரிமையாளரின் அனுமதி வேண்டும் என கூறினர். இதனையடுத்து உரிமையாளர் துரைராஜ் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் அனுராதாவிடம் போனில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தையால் பேசி மாதிரியை எடுக்க கூடாது என கூறியதோடு மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து மாவட்ட அதிகாரி அனுராதா உடனடியாக மாவட்ட கலெக்டர் மகரபூஷணம், துணை இயக்குனருக்கு தெரிவித்தார். பின்னர் ஆத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சம்பத் இது பற்றி விசாரணை நடத்தி வருகிறார். இதனையடுத்து ஜவ்வரிசி ஆலையில் இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையிலான போலீசாரின் மேற்பார்வையில் உணவு பாது காப்பு துறையினர் ஜவ்வரிசி மாதிரிகளை சேகரித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment