Oct 2, 2013

பெங்களூரில் இருந்து மதுரைக்கு 2 லாரிகளில் கடத்தப்பட்ட 16.5 லட்சம் புகையிலை பறிமுதல்

மேட்டூர், அக்.2:
பெங்களூரில் இருந்து மதுரைக்கு 2 லாரிகளில் கடத்தப்பட்ட
16.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகளை சேலம் அருகே போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரில் இருந்து சேலம் மாவட்டம் வழியாக மதுரைக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக சேலம் எஸ்பி சக்திவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், மேச்சேரி போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.
காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் தொப்பூர் சோதனைச்சாவடி பகுதியில் வாகன தணிக்கையை முடுக்கி விட்டனர். அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில், லாரிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பண்டல் பண்டலாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
லாரியை ஓட்டி வந்த மேச்சேரி வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்த வெங்கடாசலபதி (22), விஜயகுமார் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பெங்களூரில் இருந்து மதுரைக்கு கடத்திச் சென்றது தெரிய வந்தது.இதையடுத்து, தலா
18 லட்சம் மதிப்புள்ள இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார், ஒரு லாரியில் இருந்து தலா 15 கிராம் எடை கொண்ட 1,77,600 புகையிலை பாக்கெட்டுகளையும், மற்றொரு லாரியில் இருந்து தலா 17 கிராம் எடை கொண்ட 1,54,000 புகையிலை பாக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இவற்றின் மொத்த மதிப்பு
16 லட்சத்து 58 ஆயிரம். புகையிலை பொருட்களை அனுப்பி வைத்த பெங்களூர் நபர் யார்? யாருக்காக கடத்திச்செல்லப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment