Oct 2, 2013

மேச்சேரி அருகே லாரிகளில் திடீர் சோதனை தடை செய்யப்பட்ட ரூ.16½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் டிரைவர்கள் 2 பேர் கைது

 மேச்சேரி, அக்.2- அரசின் தடை செய்யப்பட்ட பொருட்கள் லாரிகளில் கடத்தி வருவதாக மேச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் தொப்பூர் சோதனை சாவடி மேச்சேரி பிரிவு ரோட்டில் அவர்கள் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக அடுத்தடுத்து 2 லாரிகள் வந்தன. அவற்றை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த வேளையில் அவற்றில் அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.16 லட்சத்து 58 ஆயிரம் ஆகும். அவற்றை கடத்தி வந்த லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.30 லட்சம்.இது தொடர்பாக லாரி டிரைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் பெயர் விஜயகுமார்(வயது 25). இன்னொருவர் வெங்கடாஜலபதி(24). இவர்கள் மேச்சேரி அருகே உள்ள வெள்ளார் செல்லப்பம்பட்டியை சேர்ந்தவர்கள்.விசாரணையில் தடை செய்யப்பட்ட பொருட்களை பெங்களூரில் இருந்து மதுரைக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது.

No comments:

Post a Comment