Sep 25, 2013

பிரபல கம்பெனி பாட்டில்களில் போலி குளிர்பானம் நிரப்பி விற்பனை - ஆய்வில் கண்டுபிடிப்பு


சேலம், செப்.25:
சேலம் நரசோதிப்பட்டி கேஜிஇஓ காலனியை சேர்ந்தவர் நாராயணன். இவர் 10 விஎஸ்என் என்ற பெயரில் லைசென்ஸ் பெற்று குளிர்பானம் தயாரித்து வந்தார். பிரபல கம்பெனியின் குளிர்பான பாட்டில்களை வாங்கி, அதில் போலி குளிர்பானம் நிரப்பி விற்பனை செய்வதாக சேலம் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புகார் சென்றது.
இதன்பேரில் நியமன அலுவலர் அனுராதா மற்றும் அதிகாரிகள் நாராயணனின் குளிர்பான கம்பெனியில் ஆய்வு செய்தனர். இதில், சுகாதாரமற்ற முறையில் பிரபல கம்பெனி குளிர்பான பாட்டிலை விலைக்கு வாங்கி அதில் போலி குளிர்பானத்தை நிரப்பி விற்பனை செய்து வந்ததை அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர்.
இது குறித்து சேலம் உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது:
குளிர் பானம் தயாரிக்கும் இடம் சுகாதாரமற்ற நிலையில் இருந்தது. இதையடுத்து கம்பெனியை இழுத்து மூடி, 15 நாட்களுக்குள் கம்பெனியை சுத்தம் செய்ய வேண்டும் என்று எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி உள்ளோம்.
15 நாட்கள் கழித்து மீண்டும் ஆய்வுக்கு செல்வோம். அப்போது குளிர்பானம் தயாரிக்கும் இடம் சுகாதாரமாக இருந்ததால், மீண்டும் கம்பெனி செயல்பட உத்தரவு வழங்குவோம். இல்லை என்றால் இழுத்து மூடி சீல் வைப்போம்.

No comments:

Post a Comment