Sep 23, 2013

ராஜபாளையம் பகுதியில் 560 கிலோ கலப்பட டீத்தூள் பாக்கெட்டுகள் பறிமுதல்

ராஜபாளையம், செப்.19-
ராஜபாளையம் பகுதியில் 560 கிலோ கலப்பட டீத்தூளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
சோதனை
ராஜபாளையம் ஸ்ரீரங்கபாளையம் பீமராஜா சாலையில் கலப்படத் டீத்தூள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கவிக்குமார் மற்றும் ராஜபாளையம் நகர் உணவு பாதுகாப்பு அலுவலர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகளுக்கு ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் சுமார் 560 கிலோ கலப்படத் டீத்தூள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கலப்படத் டீத்தூள் மாதிரி எடுக்கப்பட்டு, உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் அங்கிருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 560 கிலோ கலப்படத் டீத்தூள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பழனிச்சாமி என்பவர் தனது குடோனில் வைத்து கலப்படத் டீத்தூளை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது.
மேலும் கோவை, திருப்பூர், சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து கலப்பட டீத்தூள் பாக்கெட்டுகளை வாங்கி வந்து ராஜபாளையம் தாலுகா முழுவதும் கடைகளில் விற்பனை செய்திருப்பதும் தெரிய வந்தது.
சட்டப்படி நடவடிக்கை
இது குறித்து நியமன அலுவலர் கவிக்குமார் கூறும்போது, “கலப்பட டீத்தூள் விற்பனை செய்த கடை உரிமையாளர் பழனிச்சாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற சோதனைகள் நகர் மற்றும் கிராமப்பகுதி கடைகளில் தொடர்ந்து நடைபெறும்.
சட்டத்திற்கு மீறி செயல்படும் வியாபாரிகள் மீது உணவு பாதுகாப்புச் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற கலப்பட டீத்தூள்களை கடைஉரிமையாளர்கள் விற்பனை செய்யவோ, வாங்கி உபயோகிக்கவோ வேண்டாம்என்றார்.

No comments:

Post a Comment