Sep 3, 2013

விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை பறிமுதல்

தூத்துக்குடி, செப்.2-தூத்துக்குடியில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.புகையிலைதமிழ்நாடு அரசு புகையிலை, குட்கா உள்ளிட்டவைகளை விற்பனை செய்ய தடை விதித்து உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் புகையிலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையிலான அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.இந்த நிலையில் திருச்செந்தூர், காயல்பட்டினம், குரும்பூர், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராமகிருஷ்ணன், சந்திரமோகன், டைசஸ் பர்னாந்து, மாரியப்பன், பொன்முத்து ஞானசேகர், பாலசுப்பிரமணியன், சிவபாலன் ஆகியோர் சோதனை நடத்தினர். அப்போது தூத்துக்குடியில் இருந்து புகையிலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வினியோகம் செய்யப்படுவது தெரியவந்தது.பறிமுதல்அதன்பேரில் தூத்துக்குடி ஆசிரியர் காலனி அசோக்நகர் 8-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அங்கு ஏராளமான புகையிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அதிகாரிகள் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான 900 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த புகையிலை வடஇந்தியாவில் இருந்து பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு இருந்த பஸ்கள் மூலம் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.தொடர்ந்து அதிகாரிகள் பறிமுதல் செய்த புகையிலை பாக்கெட்டுகளை தருவைகுளத்தில் உள்ள மாநகராட்சி உரக்கிடங்குக்கு கொண்டு சென்று அழித்தனர்.

No comments:

Post a Comment