Aug 7, 2013

உணவு பாதுகாப்பு அதிகாரியாக நடித்த இருவர் சிக்கினர்

கோவை, ஆக. 7:
உணவு பாது காப்பு அதிகாரியாக நடித்து பணம் பறித்த இருவரை பிடித்து பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரிக்கு அருகே ஓட்டல் ஒன்று உள்ளது. கட ந்த சில மாதங்களுக்கு முன் ஆண், பெண் ஆகியோர் இந்த ஓட்டலுக்கு வந்து உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் எனக்கூறி ஓட்டலில் ஆய்வு செய்தனர். பின் ஓட்டல் உரிமையாளரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் பணத்தை பெற்றுச் சென்றனராம். இந்நிலையில், அதே இருவர் நேற்று மதியம் மீண்டும் பீளமேடு பகுதிக்கு வந்து அதே ஓட்டலுக்கு சென்றனர். தங்கள் ஓட் டலை ஆய்வு செய்யாமல் இருக்க பணம் அளிக்க வேண்டும் என அந்த இரு வரும் நிர்பந்தம் செய்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் அந்த இருவரையும் பிடித்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், இருவரும் கணவன் & மனைவி எனத்தெரியவந்தது. இதையடுத்து பீளமேடு போலீசார் இருவரிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Couple picked up for impersonating as food safety inspectors

Charged with impersonating
A couple have been picked up by the Peelamedu police on charges of impersonating as food safety inspectors and allegedly resorting to intimidation and extortion of merchants.
According to police, a man and a woman visited a grocery shop and ordered for packing samples for laboratory assessment for quality. It was alleged that the two left the shop after taking Rs 2,000 for not taking samples. Subsequently, the two visited a hotel in the afternoon and said that they wanted to take food samples. On suspicion about their behaviour, the hotel owner informed the police. Police have identified the two as Francis (42) and Surya (36) and inquiries are on.

No comments:

Post a Comment