Jun 24, 2017

எண்ணெய் மாதிரியில் முரண்: நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

ஈரோடு: ஈரோட்டில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில், உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரபாகர் பேசியதாவது: உணவு எண்ணெய் தயாரிப்பாளர்கள் மற்றும் ரீ-பேக்கிங் செய்பவர்கள், உரிமையாணை பெற்று தொழில் செய்ய வேண்டும். லேபிளில், பிராண்ட், எண்ணெய் பெயர், சரியான முகவரி, பேட்ச் எண், அளவு, எம்.ஆர்.பி., விலை, பயன்படுத்தும் கால அளவுகளை குறிப்பிட வேண்டும். தீப எண்ணெய் பாக்கெட்களில் 'தீபத்துக்கு மட்டும்; சாப்பாட்டுக்கு உகந்ததல்ல' என்பதை குறிப்பிட வேண்டும். மாவட்டத்தில், 298 உணவு மாதிரிகளில், 121 சட்டத்துக்கு முரணானது என தெரிந்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகார்கள் இருந்தால், 94440-42322 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும், 0424-2223545 என்ற அலுவலக எண்ணில் புகார் செய்யலாம். இவ்வாறு அவர் பேசினார்.



No comments:

Post a Comment