Jun 24, 2017

வாழை இலையை பயன்படுத்துங்க ஓட்டல்களுக்கு கலெக்டர் அறிவுரை

விருதுநகர், பிளாஸ்டிக் பேப்பரில் உணவுப் பொருட்களை பொட்டலம் கட்டத் தடை விதித்துள்ள கலெக்டர் சிவஞானம், வாழை இலை, பாக்கு மட்டை, பேப்பர் பிளேட், தொன்னை இலைகளில் தான் பொட்டலம் கட்ட வேண்டும் என, அறிவுரை வழங்கி உள்ளார்.
அவர் கூறியதாவது: 
மாவட்டத்தில் உணவகங்கள், தேநீர், பேக்கரி கடைகளில் உணவுப் பொருட்களை பொட்டலம் கட்ட பிளாஸ்டிக் தாள்களை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு கட்டுவதால் அதிலுள்ள காரீயம், காட்மியம் உள்ளிட்ட ரசாயனப் பொருட்கள் உணவுப் பொருட்களில் கலந்து, புற்றுநோய், கல்லீரல், மூளை நரம்பு பாதிப்புகள் அபாயம் உள்ளது.
இதுபோன்ற புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலம் தெரிவிக்கலாம். உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம் பிளாஸ்டிக் கவர்களில் உணவுப் பொருட்களை பொட்டலம் கட்ட தடை விதித்துள்ளது. 
இனிமேல் உணவுப் பொருட்களை வாழை இலை, பாக்கு மட்டை, பேப்பர் பிளேட், தொன்னை போன்றவற்றில் பொட்டலம் கட்ட வேண்டும். இதை மீறி செயல்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 
மேலும் உணவக உரிமையாளர்கள் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற இணையதளத்திலும், இ-சேவை மையம் மூலமும் விண்ணப்பிக்கலாம்,”என்றார்.

No comments:

Post a Comment