Oct 20, 2016

610 லி., தரமற்ற சமையல் எண்ணெய் பறிமுதல்

ஆத்தூர்: சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள், நேற்று மாலை, 6:00 மணியளவில், ஆத்தூரில் உள்ள ஸ்வீட் கடை, குடிநீர், சமையல் எண்ணெய் கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது, ஆத்தூர் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள, ராஜேந்திரன் என்பவரது ஜெயலட்சுமி ஆயில் ஸ்டோரில், 61 பெட்டிகளில் இருந்த, 610 லிட்டர் தரமற்ற சமையல் எண்ணெயை பறிமுதல் செய்தனர். அதே கடையில், தலா, 20 லிட்டர் கொண்ட, 69 கேன்களில் இருந்த குடிநீர், உற்பத்தி நிறுவனம் பெயர் இல்லாமல் இருந்த, தலா, 20 லிட்டர் கொண்ட, 25 கேன் குடிநீர் என, 1,880 லிட்டர் குடிநீர் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர் ராஜேந்திரனுக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. மேலும், குடிநீர், எண்ணெய் விற்க உரிமம் பெறவேண்டும். நகராட்சி கட்டண கழிப்பிடம் அருகில், குடிநீர் விற்கக்கூடாது என, அறிவுறுத்தினர். தொடர்ந்து, ஆத்தூர், உடையார்பாளையத்தில் உள்ள ராஜகுரு ஸ்வீட் கடையில், விதிமீறி உற்பத்தி துவங்கியதால், 'நோட்டீஸ்' வழங்கி, உற்பத்தியை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டது.

No comments:

Post a Comment