Oct 17, 2015

பெண் அதிகாரியை மிரட்டிய வழக்கு: ரியல் எஸ்டேட் அதிபருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

சேலம், அக்.17-சேலம் மெய்யனூரில் இயங்கி வரும் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் சிவகுமார். இவர் சமீபத்தில் நெல்லிக்காய் சாறு தயாரித்து விற்கும் தொழிலை நடத்தினார். அந்த நெல்லிசாறு பாட்டிலில் சோதனை நடத்தியபோது, அதில் ரசாயனம் கலந்திருப்பதாக கூறி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா, நெல்லிச்சாறு விற்பனைக்கு தடை விதித்தார். மேலும் விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பினார். இந்த நிலையில் டாக்டர் அனுராதாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சிவகுமார் பேசியதாக போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் அவர் புகார் தெரிவித்தார். அதன்பேரில், சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 
இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என்று சிவகுமார் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டுமனு செய்தார். அங்கு கீழ்கோர்ட்டில் சரண் அடைந்து ஜாமீன்பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பேரில் நேற்று சேலம் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சிவகுமார் சரண் அடைந்தார். அப்போது மாஜிஸ்திரேட்டு, 2 வாரகாலத்திற்கு சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சிவகுமார் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment