Aug 22, 2015

பள்ளி கேன்டீன்களில் பீட்ஸா, பர்கர் சிப்சுக்கு விற்க தடை

புதுடில்லி: பீட்ஸா, பர்கர், சிப்ஸ், கேக், குளிர்பானம், பிஸ்கட் போன்ற நொறுக்குத்தீனிகளை, நாடு முழுவதும் உள்ள பள்ளி கேன்டீன்களில் விற்க, விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது. 
மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சகம் நியமித்த, 10 உறுப்பினர்கள் உயர்மட்டக்குழு, பள்ளிகளில் விற்கக்கூடிய உணவு பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பித்து உள்ளது. 
இறுதி முடிவு எடுக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ள, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நாடு முழுவதும் உள்ள பள்ளி கேன்டீன்களில், இந்திய உணவு வகைகளை மட்டுமே விற்க வேண்டும். பீட்ஸா, பர்கர், சிப்ஸ், கேக், பிஸ்கட், இனிப்பு வகை, சாக்லேட், குளிர்பானம் போன்ற நொறுக்குத்தீனிகளை விற்கக் கூடாது. பள்ளிகள் இயங்கும் நேரத்தில், பள்ளியிலிருந்து, 200 மீட்டர் துாரம் வரை, நொறுக்குத்தீனிகளை விற்க தடை விதிக்க வேண்டும். 
நொறுக்குத்தீனிகளால், பள்ளி குழந்தைகளுக்கு, உடல் பருமன், நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் மனரீதியிலான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால், அவர்களுக்கு தன்னம்பிக்கை குறைபாடு ஏற்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

1 comment:


  1. Nice post...I look forward to reading more, and getting a more active part in the talks here, whilst picking up some knowledge as well..

    Dyes And Pigments Importers In Delhi

    ReplyDelete