Jul 17, 2015

சேலத்தில் 50 டன் கலப்பட வெல்லம் பறிமுதல்

சேலம், ஜூலை. 17–
சேலம் திருமகள் பை–பாஸ் பகுதி அருகே வெல்லம் ஏலச்சந்தை உள்ளது. இங்கு சேலம் மாவட்டம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வெல்ல வியாபாரிகள் லாரி மற்றும் வேன்களில் வெல்லத்தை ஏற்றி வந்து விற்று செல்கிறார்கள்.
இந்த வெல்லத்தில் சிலர் கலப்படம் செய்து கொண்டுவருகிறார்கள் என புகார் வந்தது. இதையடுத்து கடந்த வாரம் இந்த ஏலச் சந்தைக்கு சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி அனுராதா தலைமையில் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்து எச்சரிக்கை செய்து வந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் சிலர் கலப்பட வெல்லம் ஏலச்சந்தைக்கு எடுத்து வரப்படுவதாக சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத்துக்கு புகார் வந்தது.
இதையடுத்து இன்று காலை உணவு பாதுகாப்பு அதிகாரி அனுராதா மற்றும் அதிகாரிகள் வெல்லம் ஏலச்சந்தைக்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் 50 டன் அளவில் கலப்பட வெல்லம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஏலச்சந்தையில் உள்ள குடோனில் பாதுகாப்பாக வைத்தனர்.
கடந்த வாரம் சோதனையின் போது சர்க்கரை மற்றும் கெமிக்கல் கலந்து வெல்லம் தயாரித்து எடுத்து வரக்கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தோம். ஆனால் இப்போது மீண்டும் கலப்பட வெல்லத்தை கொண்டு வந்துள்ளனர்.
சுமார் 35 வண்டிகளில் எடுத்து வரப்பட்ட வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. யார் யார் கலப்பட வெல்லம் உற்பத்தி செய்கிறார்கள் என கண்டு பிடித்து அவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி கடும்நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய இருக் கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment