Jun 5, 2015

சிங்கப்பூரிலும் மேகி நூடுல்ஸூக்கு தடை!


சிங்கப்பூர்: இந்தியாவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் மேகி நூடுல்ஸூக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேகி நூடுல்ஸூல் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ரசாயன பொருட்களை கலந்ததாக கூறி தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் மேகி நூடுல்ஸூக்கு சிங்கப்பூர் திடீரென தடை விதித்துள்ளது. மேலும், மேகி நூடுல்ஸை விற்பனை செய்யவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறிய அளவிலான மேகி பாக்கெட்டுகளே சிங்கப்பூரில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், மேகியின் மற்ற தயாரிப்புகளான ஓட்ஸ் போன்றவை அங்கு இறக்குமதி செய்யப்படுவதில்லை.

No comments:

Post a Comment