Jun 3, 2015

நெஸ்லே பால்பவுடரில் புழுக்கள்

கோவை, ஜூன் 3:
கோவை யில் விற் பனை செய் யப் பட்ட நெஸ்லே நிறு வ னத் தின் பால் ப வு டர் பாக் கெட்டில் லார்வா புழுக் கள் மற் றும் வண் டு கள் இருந் துள் ளது. இதனை தொடர்ந்து பாதிக் கப் பட்ட வர் நெஸ்லே நிறு வ னம் மீது வழக்கு தொடர முடிவு செய் துள் ளார்.
ேகாவை புலி ய கு ளம் பகு தியை சேர்ந் த வர் பிரேம் ஆனந்த். கால் டாக்சி உரி மை யா ளர். இவ ருக்கு கடந்த ஏப் ரல் மாதம் இரட்டை குழந்தை பிறந் தது. குழந் தை களுக் காக கடந்த ஏப் ரல் 14ம் தேதி கோவை யில் ஒரு கடை யில் நெஸ்லே நிறு வ னத் தின் பால் ப வு டர் டின் வாங் கி யுள் ளார். இந்த பால் ப வு டர் பயன் ப டுத் தும் காலம் 2016 வரை உள் ளது. இதை ஏப் ரல் 15ம் தேதி கலந்து குழந் தை களுக்கு கொடுத் துள் ளார். அப் போது, அதில் புழுக் கள் இருப் பதை பார்த்து அதிர்ச்சி அடைந் துள் ளார். பின் னர், பால் ப வு டரை சோத னைக்கு கொடுத் துள் ளார். கடந்த மே 8ம் தேதி ஆய்வு முடிவு வந் தது. இதில், பால் ப வு டர் சாப் பிட தகு தி யற் றது என வும், அதில் 22 லார்வா புழுக் களும், 28 வண் டு களும் இருப் ப தாக தெரி ய வந் தது.
இது தொடர் பாக பிரேம் ஆனந்த் உணவு பாது காப்பு துறை அலு வ ல கத் தில் புகார் அளித் துள் ளார். உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் நெஸ்லே நிறு வ னத் தின் மீது நட வ டிக்கை எடுக்க வேண் டும் என தெரி வித் துள் ளார். மேலும், இந்த விவ கா ரம் தொடர் பாக நெஸ்லே மற் றும் விற் பனை செய்த கடை மீது நுகர் வோர் நீதி மன் றத் தில் வழக்கு போட முடிவு செய் யப் பட்டுள் ள தாக பிரேம் ஆனந்த் தெரி வித் துள் ளார்.
மேலும், புகார் கொடுக் கப் பட்ட நெஸ்லே பாக் கெட் சீரி யல் எண் களை வைத்து அது எந் த தெந்த பகு தி களில் விற் பனை செய் யப் பட்டு இருக் கி றது, விற் ப னைக்கு வைக் கப் பட்டு இருக் கி றது என் பது தொடர் பாக உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் ஆய்வு மேற் கொண்டு வரு கின் ற னர்.
நெஸ்லே நிறு வ னத் தின் மேகி நூடுல்ஸ் விவ கா ரம் நாடு முழு வ தும் சூடு பி டித் துள்ள நிலை யில் கோவை யில் நெஸ்லே நிறு வ னத் தின் பால் ப வு டர் மீது புகார் தெரி விக் கப் பட்டு இருப் பது பெரும் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.

நெஸ்லே பால்பவுடரில் உயிருடன் புழுக்கள்: கோவை பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்

மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் சிக்கித் தவிக்கும் நெஸ்லே நிறுவனத்தின் பால்பவுடரில் உயிருடன் புழுக்கள் இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கேப் டிரைவர் ஒருவர் கொண்டு வந்து கொடுத்த நெஸ்லேயின் நேன் புரோ3 பால்பவுடரை பரிசோதனை செய்ததில் அதில் உயிருடன் புழுக்கள் இருந்தது தெரியவந்தது. 
கோவையில் உள்ள உணவுப் பாதுகாப்பு பிரிவின் மருந்து பரிசோதனை மையத்தின் முதற்கட்ட சோதனையில் நெஸ்லேயின் நேன் புரோ3 பால்பவுடரில் நுண்புழுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. 
மேலும் உயிருடன் நுண் புழுக்கள் இருப்பதாலும், நுகர்வதற்கான தரநிலைகளின் தேவையை பால்பவுடர் பூர்த்தி செய்யவில்லை என்பதாலும் அது பாதுகாப்பற்றது என்று பெயர் கூற விரும்பாத அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாம்பிளைக் கொடுத்த கேப் டிரைவர் தன் குழந்தை நெஸ்லே பால்பவுடரை எடுத்துக் கொண்ட பிறகு தோல் ஒவ்வாமை ஏற்பட்டதையடுத்து பரிசோதனைக்கு அளித்துள்ளார்.
எனினும், இது குறித்து, அரசின் உணவுப் பாதுகாப்பு பரிசோதனை மையத்திலிருந்து ஒட்டுமொத்தமான, விரிவான அறிக்கை வருவதற்காக தாங்கள் காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment