Apr 1, 2015

கோவையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட 2,500 கிலோ டீதூள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை



கோவை, ஏப்.1:
கோவை சீரநாயக்கன்பாளையம் பாரதியார் வீதி பகுதியில் வாடகை வீட்டில் குடியிருப்பவர் பாலசுப்ரமணியம். இவரின் மனைவி தாரா. இவர்கள் கடந்த ஒரு வருடமாக 3 பேரை பணிக்கு அமர்த்தி வீட்டில் டீதூள் பேக் செய்து சென்னை போன்ற இடங்களுக்கு வினியோகித்து வந்தனர். இந்த டீ ஸ்டராங்காக இருக்க வேதிப்பொருள் ஒன்று கலக்கப்படுகிறது.
பொதுவாக இந்த வேதிப்பொருளை 200 கிலோ டீ தூளுக்கு 2 கிலோ தான் கலக்க வேண்டும். ஆனால், இவர்கள் அளவுக்கு அதிகமாக கலந்துள்ளனர். மேலும், போலியாக டீதூள் தயாரிப்பதாவும், கலப்பட டீதூள் தயாரித்து விற்பனை செய்வதாகவும் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இந்த தகவலின் பேரில் மாவட்ட நியமன அதிகாரி கதிரவன் உத்தரவின் பேரில் சக்திவேல், சண்முகம், அருண்ராஜ், கிருஷ்ணன், பிரவீன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, டீதூள் பேக்கை ஆய்வு செய்தனர். அதில், சென்னை விழுப்புரம் என்ற முகவரி போடப் பட்டு இருந்தது. மேலும், அதில், வேதிப்பொருள் அதிகமாக இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கு இருந்த 2,500 கிலோ டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 5 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். டீ தூள் தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வீடு சீல் வைக்கப்பட்டது. பிடிப்பட்ட கணவன், மனைவியிடம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment