Feb 12, 2015

நடராஜர் கோயில் பிரசாத கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரி சோதனை


சிதம்பரம், பிப். 12:
சிதம்பரம் நடராஜர் கோயிலின் உள்ளே 21 படி அருகே தீட்சிதர்கள் பிரசாத கடை நடத்தி வருகின்றனர். இந்த கடையில் கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா மற்றும் அலுவலர்கள் நேற்று அதிரடி ஆய்வு செய்தனர்.
கடையில் வைக்கப்பட்டிருந்த பலகாரங்களை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிதம்பரம் பத்மநாபன், கீரப்பாளையம் அருண்மொழி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பலகாரங்கள் எந்த எண்ணெயில் செய்யப்பட்டது, எப்போது தயாரிக்கப்பட்டது என அங்கிருந்த தீட்சிதர்களிடம் கேட்டறிந்தனர்.
சில பலகாரங்களில் எண்ணெய் அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. எண்ணெய் குறைவான அளவில் பயன்படுத்துமாறும், தரமான எண்ணெய் மற்றும் நெய்யில் மட்டும் பலகாரங்கள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் பிரசாத கடைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு விண்ணப்பம் செய்து லைசென்ஸ் எடுக்க வேண்டும் என தீட்சிதர்களின் செயலாளர் பாஸ்கர தீட்சிதரிடம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment