Feb 12, 2015

ஓமலூரில் பரபரப்பு உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி ரசாயனம் கலந்து தயாரித்த 131 மூட்டை வெல்லம் பறிமுதல்

ஓமலூர், பிப்.12:
சேலம் மாவட்டம் ஓமலூரில் உணவு பாதுகாப்பு துறை யினர் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது சர்க் கரை மற்றும் ரசாயன பொருட்கள் கலந்து தயாரிக்கப்பட்ட 131 மூட்டை வெல் லத்தை பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் வழியாக தர்மபுரி, சேலம், பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக ஏராளமான தாபா ஓட்டல்கள் உள்ளன. இந்த ஓட்டல்களில் சுகாதாரமற்ற முறையில், உணவு தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா மற்றும் அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
ஓமலூர் பகுதிகளில் உள்ள தண்ணீர்தொட்டி, புளியம்பட்டி, ஓமலூர், காமலாபுரம், பண்ணப்பட்டி உட்பட பல்வேறு பகுதிக ளில் உள்ள ஓட்டல் கடை களை உணவு பாது காப்பு துறையினர் ஆய்வு செய்த னர். அப்போது உணவு வகைகளில் அதிக சுவை கூட்டுவதற்காக, உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ரசாயனம் கலப்பது தெரியவந்தது. மேலும், காலாவதியான உணவு பொருட் களை விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறி முதல் செய்து அழித்தனர். ரசாயனம் கலந்து உணவு தயாரித்தால், கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
அதை தொடர்ந்து, அவ்வழியாக வெல்லம் ஏற்றி சென்ற மூன்று வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது வெல்லத்தில் அதிக அளவில் ரசாயனம் கலந்து உள்ளதும், முழுக்க முழுக்க சர்க்கரை கலந்து தயாரிக்கப்பட்ட வெல்லமூட்டைகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, வாகனங்களில் ஏற்றி வந்த 131 மூட்டை வெல்லத்தை பறி முதல் செய்த அதிகாரிகள், இதுகுறித்து வழக்கு பதிவு செய்தனர். மேலும், வெல்லத்தின் மாதிரியை சோதனைக்காக அனுப்பி வைத் தனர். ஓமலூர் பகுதிகளில் அதிகமாக சர்க்கரையை பாகாக்கி, அதன் மூலம் வெல்லம் தயாரிக்கப்படுவதாக வந்த புகாரையடுத்து இந்த சோதனை நடந்ததாக கூறிய அதிகாரிகள், ரசாயனம் மற்றும் சர்க்கரையால் தயாரிக்கப்படும் வெல்லம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அவ்வாறு தயாரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment