Feb 3, 2015

விபத்தில் சிக்கிய லாரியில் ரூ.5 லட்சம் புகையிலை பொருள் பறிமுதல்

 

 க.பரமத்தி, பிப்.3:
கரூர் மாவட்டம் க.பர மத்தி அடுத்த பவித்திரம் ஊராட்சி குளத்துபாளையத்தை சேர்ந்தவர் குப்ப ணன் (75). இவர் நேற்று முன்தினம் சைக் கிளில் கடைவீதிக்கு வந்து சென்றபோது, பெங்களூரில் இருந்து வந்த சரக்கு லாரி குளத்துப்பாளையம் அருகே குப்பணன் மீது மோதி ரோட்டில் கவிழ்ந் தது. இதில் குப்பணன் சம்பவ இடத்தில் இறந்தார்.
லாரி டிரைவர் சேலம் உப்பாரபட்டி ஜெயக்குமார், கிளீனர் மேச்சோரி தனசேகரன் ஆகியோர் காயத்துடன் கரூர் தனி யார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து மற்றும் க.பரமத்தி போலீசார் லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். மேலும் லாரியில் சோதனை செய்தபோது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்பராக் மற்றும் புகையிலை பொருட்கள் பண்டல் பண்டலாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த போலீ சார் இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சிகிச்சை பெற்று திரும்பிய லாரி டிரைவர் ஜெயக்குமார், உதவியாளர் தனசேகரன் ஆகியோரை கைது செய்து விசாரித்தபோது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்பராக், புகை யிலை பொருட்களை பெங்களுரில் இருந்து கரூரில் இயங்கி வரும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு அனுமதியின்றி கொண்டு வந்ததை ஒப்புகொண்டனர். தனியார் நிறுவனத்தின் பெயரை கூற மறுத்து விட்டனர்.

No comments:

Post a Comment