Jan 24, 2015

தரமற்ற உணவுப்பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை அதிகாரிகள் எச்சரிக்கை

திண்டுக்கல், ஜன. 24:
திண்டுக்கல் நகரில் தரமற்ற உணவுப்பொருட்களை விற்ப னை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திண்டுக்கல் நகரில் உணவு பொருட்களில் கலப்படம் செய்து விற்ப னை செய்வதாக பல்வேறு புகார் கள் வந்தன. இதனையடு த்து உணவு பாதுகாப்பு நிய மன அலுவலர் சுரேஷ் பாபு தலைமையில் அலுவலர்கள் லாரன்ஸ், செல்வம், ஆகி யோர் அடங்கிய தனிப் படை நேற்று திண்டுக்கல் நகர் மெயின்ரோடு, கச் சேரித் தெரு, பஸ் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள எண்ணெய் கடைகளிலும், பலசரக்கு கடைகளிலும் அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது மக்கள் அதி கம் பயன்படுத்தும் நெய்யில் கலப்படம் செய்திருப்பதாக வந்த புகாரின் பேரில் 2 எண்ணெய் கடை களில் நடத்திய சோதனை யில் அங்கிருந்த நெய் மா திரி களை எடுத்து மதுரை யில் உள்ள ஆய்வு கூடத்தி ற்கு சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதே போல் கலப்பட பொருட்கள், காலாவதி யான, அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற் பனை செய்யப்படுகிறதா என்பதையும் கண்காணித்து ஆய்வு செய்தனர்.
அதிகாரிகள் கூறுகை யில், �தரமற்ற உணவுப் பொ ருட்கள் மற்றும் கலப்படம் செய்யப்பட்ட பொ ருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்� என்றனர்.

No comments:

Post a Comment