Dec 26, 2014

அரிசி வற்றல் சாப்பிட்ட 32 குழந்தகள் பாதிப்பு



கடலூர், டிச. 26:
கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் அருகே தீர்த்தனகிரி கிராமம் குளத்துமேட்டுத்தெருவில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் விற்பனை செய்யப்பட்ட அரிசி வற்றல் பாக்கெட்டுகளை வாங்கி அக்கிராமத்து குழந்தைகள் சாப்பிட்டுள்ளனர். அதனை தொடர்ந்து வாந்தி, மயக்கம், தலைவலிக்கு உள்ளான 32 குழந்தைகள் உடனடியாக தீர்த்தனகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். அவர்களில் 6 குழந்தைகள் உள்நோயாளியாக தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர் பாக தகவல் அறிந்த மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜா தலைமையில் அலுவலர்கள் நல்லதம்பி, சுப்ரமணியன் உள்ளடங்கிய குழுவினர் நள்ளிரவு 1 மணிக்கு அக்கிராமத்திற்கு சென்று அந்த பெட்டிக்கடையில் சோத னை நடத்தினர்.
அங்கிருந்த 2 அரிசி வற்றல் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசார ணை நடத்தினர். அவர் குள்ளஞ்சாவடி ஆலப்பாக்கம் சாலையில் உள்ள கடையில் வாங்கி வந்ததாக தெரிவித்தார். உடனே சம்பந்தப்பட்ட கடைக்கும் சென்று அங்கிருந்து 20 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இரண்டு கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜா சீல் வைத்தார். அரிசி வற்றல் பரிசோதனைக்காக ஆய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கை வந்த உடன் அதன் பேரில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment