Dec 18, 2014

புகையிலை பொருட்கள் வைத்திருந்த வியாபாரிக்கு 25 ஆயிரம் அபராதம்

ஊட்டி, டிச. 18:
கூடலூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வியாபாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் கூடலூர் நகரில் உள்ள சில கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மறைமுகமாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. தகவலின் பேரில் கூடலூர் போலீசார் கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். முகமது ரபீக் என்பவரின் கடையில் சோதனை செய்த போது ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள (7380 பொட்டலங்கள்) தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கூடலூர் பகுதியில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட தடை செய்யப்ட்ட புகையிலை பொருட்களை மேல் நடவடிக்கையாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேற்று ஒப்படைத்தனர்.
புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் கூடலூர் நகரில் உள்ள சில கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மறைமுகமாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. தகவலின் பேரில் கூடலூர் போலீசார் கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். முகமது ரபீக் என்பவரின் கடையில் சோதனை செய்த போது ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள (7380 பொட்டலங்கள்) தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மேல் நடவடிக்கைக்காக, உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரவியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து ஊட்டிக்கு கொண்டு வரப்பட்ட புகையிலை பொருட்களை மாவட்ட வருவாய் அலுவலரும், மாவட்ட கூடுதல் நீதிபதியுமான பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பின்னர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வியாபாரி முகமது ரபீக்கிற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இவ்விசாரணையின் போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவராஜ், சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment