Oct 16, 2014

பாலமலையில் புகையிலை பாக்கெட் பறிமுதல்

மேட்டூர்: உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர், மேட்டூரில் நேற்று நடத்திய ஆய்வின்போது, புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தீபாவளி ஸ்வீட்கள் மாதிரி எடுத்து ஆய்வுக்கு கொண்டு செல்லப்பட்டது.சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா மற்றும் அலுவலர்கள் மேட்டூர் தாலுகாவில், நேற்று மேச்சேரி, மேட்டூர், கொளத்தூரில் தீபாவளிக்காக திருமண மண்டபங்களில் தயாரிக்கப்படும் ஸ்வீட்களை ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, ஸ்வீட்களை, வெண்ணெய் காகிதத்தில் மட்டுமே அடுக்கி வைக்க வேண்டும், சாதாரண காகிதங்களில் வைக்க கூடாது. ஸ்வீட் மற்றும் கார வகைகளில் நிர்ணயித்த அளவு கலர் மட்டுமே சேர்க்க வேண்டும் என, அறிவுரை வழங்கினார். மேச்சேரி, மேட்டூர் மண்டபங்களில் கலர்பொடி அதிகம் கலந்து தயாரித்த ஸ்வீட் வகைகளை ஆய்வுக்காக எடுத்து கொண்டனர்.
மேட்டூரில் விற்பனைக்காக ஆட்டோவில் எடுத்து சென்ற, "சீல்' மற்றும், "பில்' இல்லாத தண்ணீர் கேன்களை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். பின்பு கொளத்தூர் அடுத்த பாலமலை பஞ்., ராமன்பட்டியில் இரு பெட்டிகடைகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட, புகையிலை பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment