Oct 9, 2014

காலாவதி உணவு பொருட்கள் 60 கிலோ பறிமுதல் அதிகாரிகள் அதிரடி

விக்கிரவாண்டி, அக். 9:
விக்கிரவாண்டியில் காலவதியான 60 கிலோ உணவு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விக்கிரவாண்டியில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையின் விழுப்புரம் மாவட்ட நியமன அலுவலர் ஆறுமுகம் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவிக்குமார், பாரதி, பன்னீர்செல்வம், கதிரவன், ஆகியோர் கொண்ட குழுவினர் கடைகள், டீக்கடை, உணவகங்கள் மற்றும் பெட்டிகடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் காலாவதியான உணவு பொருட்கள் உள்ளதா, அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் அனுமதியின்றி விற்கப்படுகிறதா? என சோதனையிட்டனர். அப்போது காலவதியான மாவு பொருட்கள், சமையல் எண்ணெய், டால்டா, தேயிலைதூள் என 60 கிலோ உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தடை விதிக்கப்பட்ட புகையிலை பொருட்களை விற்றால் உணவு பாதுகாப்பு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
விக்கிரவாண்டியில் காலாவதியான உணவு பொருட்களை மாவட்ட நியமன அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment