Sep 14, 2014

ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட வெல்லம் லாரிகள் சிறைபிடிப்பு சேலம் உற்பத்தியாளர்கள் அதிரடி உணவு பாதுகாப்பு அலுவலர் விசாரணை




சேலம், செப்.14:சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தில் கரும்பு சாறுக்கு பதிலாக சர்க்கரை மற்றும் ரசாயனத்தை அதிகளவில் கலப்படம் செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து, வெல்லம் உற்பத்தி செய்ய மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த இரு வாரமாக வெல் லம் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் நாள்தோறும் வெல்ல உற்பத்தியாளர்கள் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு வந்து தூய வெல் லம் தயாரிக்க விருப்பம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் திடீரென வெல்ல உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் நேற்று சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதாவை சந்தித்தனர். அப்போது வெல்லம் உற்பத்தி செய்யும் சிலர் அதிகாரிகளின் உத்தரவையும் மீறி ரகசியமாக ரசாயனம் கலந்த வெல் லத்தை உற்பத்தி செய்து விற்பனைக்காக கொண்டுவந்துள்ளனர். அவர்கள் வெல்லம் கொண்டு வந்த இரண்டு லாரிகளை பிடித்து வைத்துள்ளோம். அவற்றை பறிமுதல் செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கூறினர்.
இதனையடுத்து லாரி களை சிறைபிடித்த இடத்திற்கு நியமன அலுவலர் தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விரைந்தனர். அப் போது சேலம் கந்தம்பட்டி அருகே உள்ள சரவணன் என்பருக்கு சொந்தமான வெல்ல குடோனில் இருந்த வெல் லத்தை ஆய்வு செய்த னர். அவற்றில் ரசாயனம் கலந்துள்ளதா என பரிசோதிப்பதற்காக வெல்லங்களை எடுத்து ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்த னர்.
இதுகுறித்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் உள்ள வெல்லம் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் கடந்த மாதங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது வெல்ல உற்பத்தியில் 75 சதவீதம் சர்க்கரையும், 25 சதவீதம் கரும்பு சாறும் கலப்படம் செய்யப்படுவது தெரியவந்தது. மேலும் வெளீர் மஞ்சள் நிறத்தில் தூய வெல்லம் போல் காட்சியளிப்பதற்காக பல்வேறு ரசாயனங்களை கலப்படம் செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் வெல்ல மண்டிகளில் ஆய்வு மேற் கொண்டு கலப்பட வெல் லத்தை பறிமுதல் செய்துள்ளோம். மேலும் வெல்ல உற்பத்தியில் ரசாயனம் மற் றும் சர்க்கரை கலக்க கூடாது என கூறி வெல்ல உற்பத்திக்கு தற்காலிக தடை விதித்துள் ளோம். இந்நிலையில் வியாபாரிகளின் தூண்டுதலின் பேரில் வெல்ல உற்பத்தியாளர்கள் சிலர் ரகசியமாக வெல்லம் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதாக வந்த தகவலை அடுத்து நேரடி ஆய்வு செய்யப்பட்டது. இவற்றின் மாதிரி வெல்லங்களை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி, வரும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment