Sep 9, 2014

கலப்படமற்ற வெல்லம் தயாரிக்க உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம்


பரமத்திவேலூர், செப்.6:பிலிக்கல்பாளையத்தில், கலெக்டர் தட்சிணாமூர்த்தியின் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில், கபிலர்மலை வட்டார வெல்ல உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மண்டிக்கடைக்காரர்கள் ஆகியோருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். இதில் வெல்லம் தயாரிக்கும் போது, சர்க்கரை கலக்க கூடாது, ரசாயன பொருட்கள் எதையும் கலக்காமல் இயற்கையான முறையில் மட்டுமே வெல்லம் தயாரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கலப்படம் செய்து தயாரிக்கப்படும் வெல்லத்தை வியாபாரிகளோ, மண்டிக்கடைக்காரர்களோ வாங்கி விற்பனை செய்யக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.
மேலும் இப்பகுதியில் உள்ள வெல்ல ஆலைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்து, வெல்ல உணவு மாதிரியை பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்து, அறிக்கையின்படி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கூட்டத்தில் வெல்ல உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மண்டிக்கடைக்காரர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர். இதற்கான ஏற்பாடுகளை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவசண்முகம், சிவநேசன், இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர். வெல்ல மண்டி சார்பாக ராசு, தெய்வநாயகா, ரவிச்சந்திரன், சேகர் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment