Sep 21, 2014

பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் 100 கிலோ ரசாயன பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நடவடிக்கை

தர்மபுரி, செப்.21-
வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் நடத்திய திடீர் சோதனையில் 100 கிலோ ரசாயன பொருட் களை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
திடீர் சோதனை
தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பாப்பிரெட்டிப் பட்டி, மாரண்டஅள்ளி, காரி மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவு கரும் புகள் பயிரிடப் பட்டு வருகிறது. இந்த கரும்புகள் கடகத்தூர், பாலக்கோடு உள்ளிட்ட பகுதி களில் செயல் பட்டு வரும் தனியார் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்பி வைக் கப்படுகிறது. தர்மபுரி மாவட் டத்தில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக் கும் ஆலைகள் செயல்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் உள்ள ஆலைகளில் வெல்லத் தின் நிறத்தை கூட்டுவதற்காக பல்வேறு ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் விவேகானந்தனுக்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை அலுவலர் களுக்கு கலெக்டர் உத்தரவிட் டார்.
ரசாயன பொருட்கள் பறிமுதல்
இந்த உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தினேஷ் தலைமையில் அலுவலர்கள் கோபிநாத், குமணன், கந்தசாமி, சிவமணி ஆகியோர் கடகத்தூர், பாலக் கோடு, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலை களில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது பால்பவுடர், மைதா, வாசிங் சோடா, காஸ் டிக் சோடா உள்ளிட்ட பல் வேறு ரசாயன பொருட்களை பயன்படுத்தி வெல்லம் தயா ரிப்பது தெரியவந்தது.
இதனையடுத்து தனியார் வெல்லம் தயாரிக்கும் ஆலை களில் பயன்படுத்திய 100 கிலோ அளவிலான ரசாயன பொருட்களை அலுவலர்கள் பறிமுதல் செய் தனர். மேலும் அதில் சில வற்றை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். ரசாயன பொருட் களை பயன்படுத்தி வெல்லம் தயாரிக்கும் ஆலை கள் சீல் வைக்கப்படும். மேலும், அவற்றின் உரிமையா ளர் கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று அலுவ லர்கள் எச்சரிக்கை விடுத்த னர்.

No comments:

Post a Comment