Aug 11, 2014

தேனி நகரில் தரமற்ற உணவுகளால் உடல் நலம் பாதிக்கும் அபாயம் உணவுத்துறை நடவடிக்கை எடுக்குமா?

தேனி, ஆக.11:
தேனி நகரில் தரமற்ற எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் வடை, பஜ்ஜிகளால் உடல் நலக்கேடு ஏற்படுவதை தடுக்க உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தேனிக்கு நாள்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, பல்லாயி ரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ரோட் டோரங்களில் தள்ளுவண் டிகளில் வடை, பஜ்ஜி, சிக்கன் போன்றவைகள் கடைகள் வைத்து விற்கப்ப டுகின்றன. பசி நேரத்தில் பொதுமக்கள் இதை வாங்கி உண்கின்றனர்.
இத்தகைய கடைகளில் தயாரிக்கப்படும் பலகாரங் களுக்கு பயன்படுத்தப்படும் எண்ணை தரமானதா என்பதை யாரும் பார்ப்ப தில்லை. தரம் குறைந்த பாமாயில், பலமுறை பயன் படுத்திய எண்ணையை கொண்டு பலகாரங்கள் தயாரிக்கப்படுவதால், இத்தகைய பலகாரங்களை உண்ணக்கூடிய பொதுமக் களுக்கு வயிற்று உபாதை ஏற்பட்டு வருகிறது. இத னால், ஒவ்வாமை நோய் ஏற்பட்டு பல ஆயிரங்களை மருத்துவமனைகளுக்கு செலவளிக்கும் நிலை உள்ளது. உடலுக்கு கேடு ஏற்படுத்தும் இதுபோன்ற உணவு பண்டங்கள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

No comments:

Post a Comment