Jul 30, 2014

6 கடை உரிமையாளர் மீது வழக்கு 296 புகையிலை பாக்கெட் பறிமுதல்


திருப்பூர், ஜூலை 30:
மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக தொடர் புகார் எழுந்தது. இதன்பேரில், திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு, சென்ட்ரல், அனுப்பர்பாளையம் போலீசார், பிச்சம்பாளையம், அங்கேரிபாளையம், தில்லை நகர், மங்கலம் ரோடு ஆகிய பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளில் சோதனையிட்டனர். இதில் 10க்கும் மேற்பட்ட கடைகளில் பான்மசாலா பொருட்களான ஹான்ஸ், சின்னி, கெய்னி, கூல்லிப், கணேச்க் புகையிலை, பதன்ஹெல்ப், சைனி உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பான்மசாலா பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், ரூ.2,683 மதிப்பிலான 296 போதை பாக்கு பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment