Jun 26, 2014

பள்ளிகள் அருகிலேயே பான்பராக், குட்கா விற்பனை படுஜோர்

கம்பம் ஜூன் 26:
கம்பம் நகரில் பள்ளிகளின் அருகி லேயே பான் மசாலா, புகை யிலை பொருட்கள் விற் பனை செய்யப்படுகின்றன.
தமிழக அரசு பான் மசாலா, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்கு தடை செய்துள்ளது. ஆனால் கம்பம் நகர் பகுதி யில் புதிய பஸ் ஸ்டாண்ட், வேலப்பர் கோயில் தெரு, கம்பம் மெட்டு ரோடு, புது பள்ளிவாசல் தெரு, காந்தி சிலை ரோடு, கம்பம் வாரச்சந்தைகளிலும் மற்றும் மெயின் ரோடுகளில் உள்ள அனைத்து பெட்டிக் கடைகளிலும் பொதுமக்கள் பார்வையில் படும்படி புகையிலை பொருட்களை சரம் சரமாக தொங்கவிட்டு பகிரங்கமாக விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் இந்த பழக்கத்தை கைவிட்டவர்கள் கூட மீண்டும் புகையிலை பொருட்களை பயன்படுத்த துவங்கி விட்டனர். மேலும் பள்ளி, கல்லூரிகள் அருகி லேயே புகையிலை பொருட் கள் விற்பனை செய்யப்படுவதால், இதனை வாங்கி பயன்படுத்தும் மாணவர்களும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே கம்பம் பகுதிகளில் அதிகரித்துள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட் கள் விற்பனையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோ ரிக்கை விடுத்துள்ள னர்.

No comments:

Post a Comment