Jun 27, 2014

தடை செய்யப்பட்ட பாக்கு வகைகள் பறிமுதல்


கோபி, ஜூன் 27:
கோபி மார் க்கெட் பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பாக்கு வகைகளை பறிமுதல் செய்து அழித்தனர்.
கோபி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இரண்டு மதுபான பார்கள் உள்ளது. இந்த பார்களில் விற்கப்படும் திண்பண்டங்கள், குடிநீர் பாக்கெட்டுகள், உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் காலாவதியான நிலையிலும் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலருக்கு புகார்கள் சென்றது. அதைத்தொடர்ந்து நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவ லர் கருணாநிதி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மனோகரன், கண்ணன், மணி, முருகேசன் ஆகியோர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள இரண்டு பார்களிலும் திடீர் சோ தனை நடத்தினர். அப்போது இரண்டு பார்களும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதும், அங்கு போடப்பட்டிருந்த டேபிள்கள் மற்றும் உணவு பொருட்கள் வைக்கப்பட்டிருந்த டேபிள்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து அவற்றை சுத்தம் செய்ய உத்தரவிட்ட அதிகாரிகள் பாரை சுகாதாரமான முறையில் வைத்திருக்க அறிவுரை வழங்கினார்கள். அதைத்தொடர்ந்து மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் நடத்திய சோதனையில் அங்கு தடை செய்யப்பட்ட பாக்கு வகை கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அங்கு இருந்த சுமார் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பாக்கு மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை தீவைத்து அழித்தனர்.

No comments:

Post a Comment