Jun 23, 2014

காரைக்காலில் விதி மீறிய வியாபார நிறுவனங்களுக்கு நோட்டீஸ் உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

காரைக்கால், ஜூன்23:
காரைக்காலில் விதிகளை மீறும் வியாபார நிறுவனங்களுக்கு, விளக்கம் கேட்டு புதுச்சேரி உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 படி, அனைத்து வணிகர்களும் வரும் ஆகஸ்ட்&4ம் தேதிக்குள், தங்கள் நிறுவன உரிமம் மற்றும் பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்திற்கு புறம்பாக, காரைக்காலில் சில உணவு வியாபாரிகள் செயல்படுவதாக வந்த தொடர் புகாரையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை உதவி ஆணையர் உத்தரவின் படி, புதுச்சேரி உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் நேற்றுமுன்தினம் காரைக்காலில் உள்ள டீக்கடை, உணவகம், மளிகை மற்றும் டிபார்மெண்ட் ஸ்டோர்களில் திடீர் ஆய்வு நடத்தினார். ஆய்வின் போது, உணவுப்பொருள்களின் தரம், கலப்படம், உணவு பொருளின் காலாவதி தேதி ஆகியவை சரிபார்க்கப்பட்டது. ஆய்வில், ஒரு சில நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவது தெரியவந்ததையடுத்து, அந்நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் தரப்பட்டது. அதற்கு சரியான விளக்கம் தரவில்லையெனில் கடும் நடவடிகை எடுக்கப்படும் என புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment