Apr 8, 2014

சேலம் ரயில்வே ஸ்டேஷனில் தடை செய்யப்பட்ட புகையிலை கடத்திய கேரள வாலிபர் கைது

சேலம், ஏப்.6: 
சேலத்தில் இருந்து ரயில் மூலம் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை கேரளாவுக்கு கடத்த முயன்ற வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். 
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்களை ரயில்களில் கடத்தி வருகின்றனரா? என கண்காணிக்கும் படி ரயில்வே போலீசாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழு வதும் ரயில்வே போலீசா ரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து தனிப்படை அமைத்து, ரயில் பயணிகளிடம் சோதனை நடத்தி வருகின்றனர். 
சேலம் ரயில்வே ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் ஏட்டுகள் பாரதிராஜா, தங்கராஜ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் நேற்று அதிகாலை, பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர். 3வது பிளாட்பாரத்தில் ஐதராபாத்& திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரசில் ஏறுவதற்காக ஏராளமான பயணிகள் நின்றிருந்தனர். அதில், சந்தேகப்படும்படியாக இருந்த வாலிபர் ஒருவர் வைத்திருந்த பேக்கை போலீசார் சோதனையிட்டனர். அதற்குள் தடை செய்யப்பட்ட 150 புகையிலை பாக்கெட் பண்டல்கள் குவியலாக இருந்தது. இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம். 
உடனே அதை பறிமுதல் செய்து, அந்த வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சதீசன் (34) என்பது தெரிந்தது. சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட் க்ஷ்டுகளை வாங்கிக்கொண்டு, திருச்சூர் செல்வதற்காக சபரி எக்ஸ்பிரசுக்கு காத்திருந்தது தெரியவந்தது. பின்னர் கைதான சதீசனையும், கைப்பற்றப்பட்ட புகையிலை பொருட்க ளையும் சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். 
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில், தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகளை திருச்சூருக்கு கடத்த முயன்ற கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

No comments:

Post a Comment