Apr 8, 2014

அனைவரும் சாப்பிடலாம் ஆர்கானிக் ஃபாஸ்ட் ஃபுட்


குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்றால், முதலில் கேட்பது ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் 'துரித உணவு’ வகைகளைத்தான். பரோட்டா மட்டுமே தெரிந்த கிராமப்புறங்களில் கூட, 'பாவ் பாஜி, பானி பூரி, நூடுல்ஸ்’ எல்லாம் இப்போது சக்கைப்போடு போடுகின்றன. காரணம், துரித உணவின் ருசி மற்றும் அதன் மணம். பெருகிவரும் இந்த இன்ஸ்டன்ட் உணவுக் கலாசாரத்தினால், மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது தெரிந்தும்கூட இந்த 'ஜங்க் ஃபுட்’ ருசிக்கு அடிமையாகின்றனர் பலர். இந்த உணவுகளில், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருள்கள்தான் அதிக அளவில் இருக்கின்றன. சுவைக்காகச் சேர்க்கப்படும் அதிகப்படியான உப்பு, சர்க்கரை, மாவுப்பொருள்கள் மற்றும் கொழுப்பு போன்றவை, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய நோய் போன்ற நோய்களை ஏற்படுத்தக்கூடும். நுகர்வோரைக் கவர்வதற்காகச் சேர்க்கப்படும் செயற்கை ரசாயன நிறமூட்டிகளும் சுவையூட்டிகளும், அஜீரணத்தில் தொடங்கி அல்சர், புற்றுநோய் என பல ஆபத்துகளில் கொண்டுபோய்விடும் என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை! அதிலும், சின்னக் குழந்தைகள் இந்த 'ஃபாஸ்ட் புட்’ வகை உணவுகளை அதிகம் விரும்பி உண்பதால், அவர்கள் இளமையிலேயே நோய்வாய்ப்படுவதும் அதிகரித்துவருகிறது. 

No comments:

Post a Comment