Apr 11, 2014

நாமக்கல் அருகே ஜவ்வரிசி தயாரிப்பில் கலப்படம்; தொழிற்சாலைக்கு சீல்

நாமக்கல், ஏப். 11: 
நாமக்கல் அருகே லைசென்ஸ் இல்லா மல் இயங்கி வந்த ஜவ்வரிசி தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர். மரவள்ளிக் கிழங்கு மாவுடன் கலப்படம் செய்ய வைதிருந்த மக்காச் சோள மாவையும் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். 
நாமக்கல்லை அடுத்த அலங்காநத்தம் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மரவள்ளி கிழங்கு மாவுடன் மக்காசோள மாவை கலப்படம் செய்து ஜவ்வரிசி தயாரிப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. மேலும், 320 மூட்டை மக்காசோள மாவு லாரியில் கொண்டு வந்திருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையிலான அலுவலர்கள் அந்த தொழிற்சாலைக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர். 
அப்போது அங்கு மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த கலப்படம் செய்ய மா வை சோதனை செய்தனர். ஏற்கனவே அந்த தொழிற்சா லை லைசென்சு இல்லாமல் இயங்கி வந்ததால் அதை நடத்தி வந்தவருக்கு நோட் டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 
தற்போது சாலையூரை சேர்ந்த செல்வராஜ் என்பவர் லீசுக்கு எடுத்து தொழிற்சாலை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த மாவு பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கலப்படம் உள்ளதா என்பது பரிசோதனையின் முடிவில் தெரியவரும் என உணவு பாதுகாப்பு நியமன அலு வலர் தமிழ்செல்வன் தெரிவித்தார். அதை தொடர்ந்து, நேற்றுகாலை அந்த தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல்வைத்தனர்.

No comments:

Post a Comment