Feb 11, 2014

குளிர்பானம் குடித்து சிறுமி பலியான விவகாரம் விற்பனையாளர், விநியோகஸ்தர் கைது கலெக்டர் கிர்லோஷ்குமார் தகவல்

கடலூர், பிப்.11- நெய்வேலி அருகே குளிர்பானம் குடித்து சிறுமி பலியான சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர், விநியோகஸ்தர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட கடையை பூட்டி சீல் வைத்துள்ளதாகவும் கலெக்டர் கிர்லோஷ்குமார் தெரிவித்துள்ளார். தொழிலாளிநெய்வேலி அருகே உள்ள சேப்ளாநத்தம் மேற்கு தெருவை சேர்ந்தவர் அஞ்சாபுலி. தொழிலாளி. இவர் நேற்று இரவு அங்குள்ள கடையில் 2 குளிர்பான பாட்டில்களை வாங்கி வந்தார். அதில் ஒன்றை எடுத்து தானும், அவரது மனைவி கலையரசி, மகள்கள் லலிதா (வயது 10), அபிராமி (8), கவுசல்யா (6), மகன் பரமசிவம் (2) ஆகியோருக்கும் தம்ளரில் ஊற்றி கொடுத்தார். குளிர்பானத்தை குடித்த சில நிமிடங்களில் 4 குழந்தைகளும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனால் பதறிப்போன அஞ்சாபுலி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தைகளை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். சிறுமி பலிபின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அபிராமி பரிதாபமாக உயிரிழந்தாள். மற்ற 3 குழந்தைகளுக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் லலிதாவின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட 3 குழந்தைகளையும் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாவட்ட நிர்வாகம் நேற்று அனுப்பி வைத்தது. மேலும் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் எம்.பி.ராஜா தலைமையில் அந்தந்த பகுதி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-மேல்சிகிச்சைநெய்வேலி அருகே குளிர்பானம் குடித்து மயங்கிய நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 குழந்தைகளையும் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உடன் கடலூரில் இருந்து டாக்டர் குழு ஒன்றையும் அனுப்பி வைத்து 3 குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3 குழந்தைகளும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்கள்.மேலும் குழந்தைகள் குடித்த குளிர்பானம், சாப்பிட்ட உணவு ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து சென்னை கிண்டியில் உள்ள பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்து இருக்கிறோம்.2 பேர் கைதுசேப்ளாநத்தத்தில் குழந்தைகள் குடித்த குளிர்பானத்தை விற்பனை செய்த கடையின் உரிமையாளர் நாகரத்தினம், விநியோகஸ்தர் பாபு ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குளிர்பானத்தை உற்பத்தி செய்யும் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த மாவட்ட கலெக்டரிடம் பேசி குளிர்பான உற்பத்தி நிறுவனத்தை மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு தயாரிக்கப்படும் குளிர்பானத்தின் மாதிரியையும் சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம்.40 இடங்களில் சோதனைகுழந்தைகள் குடித்த குளிர்பான பாட்டிலுடன் வெளிவந்த குளிர்பான பாட்டில்கள் மாவட்டம் முழுவதிலும் 40 இடங்களில் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வருவாய்த்துறை மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குறிப்பிட்ட இடங்களில் உள்ள கடைகளை சோதனை செய்து அங்கு விற்பனைக்காக வைத்திருந்த குளிர்பான பாட்டில்களை பறிமுதல் செய்து அவற்றை பொதுமக்களுக்கு விற்பனை செய்யாமல் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் தரமற்ற, கெட்டுப்போன குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment