Feb 11, 2014

குளிர்பான கடைக்காரர் கைது விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு 3 குழந்தைகளுக்கு ஜிப்மரில் சிகிச்சை

நெய்வேலி, பிப். 11:
நெய்வேலி அருகே குளிர்பானம் குடித்த சிறுமி பலியான சம்பவத்தில் கடைக்காரர் மற்றும் குளிர்பான டீலர் கைது செய்யப்பட்டனர். சிறுமியின் சகோதர, சகோதரிகள் 3 பேருக்கு புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க கடலூர் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 
கடலூர் மாவட்டம் தெற்கு சேப்ளாநத்தம் பகுதியை சேர்ந்தவர் அஞ்சாபுலி (49). நெய்வேலி என்எல்சி முதலாவது சுரங்க விரிவாக்கத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி கலையரசி (42). இவர்களுக்கு லலிதா (10), அபிராமி (9), கவுசல்யா (6) என்ற 3 மகள்களும், பரமசிவம் (3) என்ற மகனும் உள்ளனர். அஞ்சாபுலி தினமும் குழந்தைகளுக்கு தின்பண்டம் வாங்கிச் செல்வது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் அங்குள்ள பெட்டிக் கடையில் பிரபல நிறுவனத்தின் அரைலிட்டர் குளிர்பான பாட்டில் வாங்கிச் சென்றுள்ளார். அதை குழந்தைகள் குடித்துள்ளனர். 
நெய்வேலி அருகே சிறுமி பலி 

குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் 4 குழந்தைகளும் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சி அடை ந்த அஞ்சாபுலி மற்றும் உறவினர்கள் குழந்தைகளை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு 4 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனி ன்றி சிறுமி அபிராமி பரிதாபமாக இறந்தார். மற்ற 3 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவல் அறி ந்ததும் மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் ஜவகர் விரைந்து சென்று அபிராமியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மற்ற குழந்தை களுக்கு போதிய சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களை கேட்டுக்கொண்டார். சேப்ளாநத்தத்தில் உள்ள அஞ்சா புலியின் வீட்டுக்கு நெய்வேலி டிஎஸ்பி கலைச்செல்வன், சப்&இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் ஆகியோர் விசாரணை நடத்தினர். உயிர்பலிக்கு காரணமான குளிர்பான பாட்டிலை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி சேப்ளாநத்தம் கிராம நிர்வாக அலுவலர் மதியழகன் அளித்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட பெட்டிக்கடையில் விற்கப்பட்டது காலாவதியான குளிர்பானமா? அல்லது போலி குளிர்பானமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தாசில்தாருக்கும் தகவல் அளிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது. 
இதை தொடர்ந்து கடையின் உரிமையாளர் நாகரத்தினம், விநியோகஸ்தர் பாபு ஆகிய 2 பேரை போலீசார் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். சேப்ளாநத்தம் வீணங்கேணி, மந்தாரக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜா தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, சிறுமி பருகிய பேட்ஜ் உடைய அனைத்து குளிர்பானங்களையும் பறிமுதல் செய்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர். 
குளிர்பானம் குடித்து குழந்தை இறந்தது குறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: 

பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்கள், குணமடைந்து வருகின்றனர். குழந்தை மரணத்துக்கு காரணமான குளிர்பானத்தை விற்ற கடைக்காரர் நாகரத்தினம், விநியோகஸ்தர் பாபு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடையும் குடோனும் சீல் வைக்கப்பட்டுள்ளது. குளிர்பான சாம்பிள்கள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர் சப்ளை செய்த 40 கடைகளிலும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குளிர்பான தொழிற் சாலை, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் செயல்பட்டுவருகிறது. எனவே, கடலூர் மாவட்ட ஆட்சியர் அளித்த தகவலின் பேரில் அந்த தொழிற்சாலையில் அதிகாரிகள் மூலம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அதிரடி சோதனை நடத்தி குளிர்பான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவையும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. 
கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு பிற பகுதிகளில் உள்ள கடைகளில் காலாவதியான குளிர்பானங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

குளிர்பானம் குடித்து சிறுமி பலியான சம்பவம் நெய்வேலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகாரிகள் அலட்சியம் 
உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன் ரெய்டு நடத்தி காலாவதியான பிஸ்கட், நொறுக்குத் தீனி போன்றவற்றை கைப்பற்றி அழித்தனர். அதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதன் பிறகு சோதனை நடவடிக்கை தொடரவில்லை. இதனால், சாலையோர பெட்டிக் கடைகளில் குளிர்பான பாட்டில்களை கயிற்றில் கட்டி தொங்க விட்டு விற்கின்றனர். வெயில் படுவதால் குளிர்பான பாட்டில்கள் சூடாகி ரசாயன மாற்றம் நிகழ்கிறது. மேலும் காலாவதி தேதி முடிந்த பின்னரும் குளிர்பானங்களை விற்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே, குழந்தைகளின் உயிரோடு விளையாடும் உணவு பொருட்கள் விவகாரத்தில் அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment