Jan 6, 2014

அம்பை வட்டார பகுதியில் கலப்பட உணவு பொருட்கள் விற்ற வியாபாரிகள் மீது வழக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் தகவல்

வி.கே.புரம், ஜன.6:
அம்பை வட்டார பகுதியில் கலப் பட உணவு பொருட்கள் விற்ற வியாபாரிகள் மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அலுவ லர் தெரிவித்துள்ளார். 
அம்பை வட்டார பகுதியில் கலப்பட உணவு பொருட்கள் மற்றும் அர சால் தடை செய்யப்பட்ட பான்பராக், நிக்கோட்டின் கலந்த புகையிலை ஆகி யவை விற்கப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் அம்பை வட்டார உணவு பாதுகாப்பு அலுவ லர் நாகசுப்பிரமணியன் தலைமையில் அதிகாரிகள் பிரம்மதேசம், சிவந்திபுரம், ஆறுமுகம்பட்டி மெயின் ரோடு பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கலப்பட உணவு பொருட் கள் மற்றும் பான்பராக், நிகோடின் கலந்த புகை யிலை விற்பனை செய்த வியாபாரிகளிடம் உணவு மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வு கூடத்துக்கு அனுப்பப்பட்டது. இதில் உணவுபொருட்கள் அனைத்தும் கலப்படம் என அறிக்கை வந்தது. இதையடுத்து கலப்பட உணவு பொருட் கள் மற்றும் பான்பராக், புகையிலை விற்ற வியாபாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு உணவு பாதுகாப்பு ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அம்பை வட்டார உணவு பாதுகாப்பு அலுவ லர் நாகசுப்பிரமணியன் தெரிவித்தார். 
மேலும் பொது மக்கள் உணவு பொருட்களை வாங்கும் போது தரமான பொருட்களை வாங்க வேண்டும் என்றும் உணவு பொருட்களில் தயாரிப்பு தேதி, காலாவதியான தேதிகளை பார்த்து வாங்க வேண்டும் என அவர் தெரிவித்தார். உடன் அம்பை நகராட்சி உணவு பாது காப்பு அலுவலர் நாகரா ஜன், மேலநீலிதநல்லூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment