Nov 29, 2013

திருப்பூரில் 2 குடிநீர் ஆலைகளுக்கு "சீல்' : முறைகேடாக இயங்கியது அம்பலம்

திருப்பூர்: திருப்பூரில், முறைகேடாக இயங்கிய, இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு, உணவு பாதுகாப்பு துறையினர், "சீல்' வைத்தனர். திருப்பூர், திருமுருகன்பூண்டியில், சோமனூரைச் சேர்ந்த சண்முகம் என்பவருக்குச் சொந்தமான, "சூப்பர் ஸ்பிரிங்' குடிநீர் நிறுவனம், நான்கு மாதங்களாக இயங்கி வந்தது. பனியன் நிறுவனத்துக்கென, மின் இணைப்பு பெற்று, குடிநீர் சுத்திகரிப்பு செய்வதை, மின்வாரியத்தின், முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய பறக்கும் படையினர் கண்டுபிடித்தனர். இதுபற்றி உள்ளூர், மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதேபோல், பெருமாநல்லூர் ஆசான் தோட்டம் பகுதியில், ராஜேஷ் என்பவருக்குச் சொந்தமான, "ஜெய் ஆஞ்சநேயா அக்குவா பார்ம்ஸ் நிறுவனம்', "அக்குவா பர்பெக்ட்' என்ற பெயரில், மூன்று ஆண்டுகளாக இயங்கி வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இத்தகவல் கிடைத்ததும், உணவு பொருள் பாதுகாப்பு மற்றும் சுகாதார கண்காணிப்பு அலுவலர்கள், இரு நிறுவனங்களிலும் ஆய்வு செய்தனர். ஆய்வில், குடிநீர் சுத்திகரிப்பு தொழில் நுட்பம், ஆய்வகம், சுகாதாரம், உரிமம் என, எதுவுமே இல்லாமல், நிறுவனங்கள் இயங்கியதும், நேரடியாக தண்ணீரை பிடித்து கேன்களில் அடைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, உரிமம் இல்லாமல், முறைகேடாக இயங்கிய இவ்விரு நிறுவனங்களையும் அதிகாரிகள், "சீல்' வைத்தனர்.



No comments:

Post a Comment