Sep 4, 2013

குடிநீர் நிறுவனங்களுக்கு அக். 7 வரை பசுமை தீர்ப்பாயம் கெடு!

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் விதிமுறைகளை அமல்படுத்த  குடிநீர் நிறுவனங்கள் அவகாகம் கேட்டதை தொடர்ந்து, அக்டோபர் 7ஆம் தேதி வரை பசுமை தீர்ப்பாயம் கெடு விதித்துள்ளது.
குடிநீர் சப்ளை செய்யும் நிறுவனங்கள், சுகாதாரமற்ற குடிநீரை வழங்குவதாக கூறி தாமாகவே முன் வந்து பசுமை தீர்ப்பாயம் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தது. இதையடுத்து, 300க்கும் மேற்பட்ட குடிநீர் நிறுவனங்களுக்கு சீல் வைக்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து குடிநீர் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சில விதிமுறைகளை அமல்படுத்த உத்தரவிட்டது.
இந்நிலையில்,இந்த வழக்கு சென்னை பசுமைத் தீர்ப்பாயம் நீதிபதி சொக்கலிங்கம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த விதிமுறைகளை அமல்படுத்த அவகாசம் தேவை என்று குடிநீர் நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அக்டோபர் 7ஆம் தேதி வரை அவகாசம் அளித்த நீதிபதி, அதுவரை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment