Aug 28, 2013

திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தரமான உணவு : ஓட்டல் உரிமையாளர்களுக்கு உத்தரவு

திருப்பதி: திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு, தரமான உணவு வழங்க, தேவஸ்தான சுகாதார நலத்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். திருமலையில் உள்ள, ஓட்டல் நிர்வாகிகளுடன், தேவஸ்தான சுகாதார நலத்துறை அதிகாரி வெங்கட்ரமணா கலந்துரையாடினார். பின்னர், அவர் கூறியதாவது:
ஓட்டல்களில், அதிகாரிகளுக்கு தெரியும் வகையில், ஓட்டல் உரிமம் நகலை, சுவரில் மாட்ட வேண்டும். அனைத்து ஓட்டல்களில் விலைப் பட்டியல் வைக்க வேண்டும். ஓட்டலுக்கு வரும் அனைவருக்கும், தூய்மையான குடிநீரை, குழாய்கள் மூலம் வினியோகிக்க வேண்டும். தரமான மளிகைப் பொருட்களை, பயன்படுத்த வேண்டும். ஓட்டல்கள், சுத்தமாக இருக்க வேண்டும். எப்பகுதியிலும், பிளாஸ்டிக் பொருட்கள் இருக்கக் கூடாது. ஈக்கள் வருவதைத் தடுக்க, "பெஸ்டோபிளாஷ்' வைக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும், ஈக்கள், பல்லிகள், கரப்பான் பூச்சிகள், எதுவும் இருக்கக் கூடாது. அனைத்து ஓட்டல்களிலும், தீயணைப்புக் கருவிகள் வைக்கப்பட வேண்டும். அதிகாலை, 5:00 மணியில் இருந்து, இரவு, 11:00 மணி வரை மட்டுமே, ஓட்டல்கள் திறந்திருக்க வேண்டும். பின்னர், மூடப்பட வேண்டும். தேவஸ்தானத்தால், நிர்ணயிக்கப்பட்ட இடங்களைத் தவிர, பிற இடங்களில் கடை வைத்தால், அவர்களின், உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு, கலந்துரையாடலில், முடிவு செய்யப்பட்டதாக, வெங்கட்ரமணா தெரிவித்தார்.

No comments:

Post a Comment