Aug 27, 2013

சீர்காழி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை ஜோர் நடவடிக்கை எடுக்கப்படுமா?

சீர்காழி, ஆக.27:
நாகை மாவட்டம் சீர்காழி, கொள் ளிடம், புதுப்பட்டினம், வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு, பொறை யார் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா போன்ற போதை பொருட்கள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அரசால் தடை செய்வதற்கு முன் ஹான்ஸ் புகையிலை ரூ.4க்கும், பான்பாராக் ரூ.3க்கும், குட்கா ரூ.5க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற் போது ஹான்ஸ் புகையிலை பாக்கெட் ரூ.10க்கும், பான் பாராக் 8 ரூபாய்க்கும், குட்கா ரூ.10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு பொதுமக்கள் நலன் கருதி போதை பொருட்களான பான் பாராக், குட்கா, ஹான்ஸ் போன்ற பொருட்களை தடை செய்தது. ஆனால் பெரும்பாலான கடைகளில் இந்த பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. போலீசார் பெயரளவில் மட்டும் ஒரு சில கடைகளில் சோதனை யிட்டு பான்பாராக், குட்கா, ஹான்ஸ் போன்ற பொருட் களை பறிமுதல் செய்து அழிக்கின்றனர். ஆனால் புற்றீசல்போல் மீண்டும் பெரும்பாலான கடைகளில் போதை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தி போதை பொருட்கள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment