Aug 27, 2013

கேன் தண்ணீர் விவகாரம் மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் கண்டனம் செப்.4ல் அறிக்கை தர உத்தரவு

சென்னை ஆக. 27:
கேன் தணணீரில் மாசு கலந்துள்ளதா என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்யாத மாசுகட்டுப்பாடு வாரியத்துக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
தனியார் நிறுவனங்கள் சார்பில் வீடுகளுக்கு வழங்கப்படும் கேன் தண்ணீரில் மாசு கலந்து காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கடந்த மே மாதம் கேன் தண்ணீர் உரிமையாளர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஒரு கேனின் விலை
75 முதல்100 வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து இப் பிரச்னை யில் வழக்கு தொடர்ந்தது. தமிழ்நாடு மாசு கட்டுப் பாடு வாரியத்துக்கு பதில் தருமாறு தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியது. கேன் தண்ணீரில் மாசு கலந்து காணப்படுவது தொடர்பாக ஆகஸ்ட் 26ல் அறி க்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு தேசிய பசுமை தர்ப்பாயத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. நதிபதி சொக்கலிங்கம், மற்றும் உறுப்பி னர் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்த விசாரணை யில், தர்ப்பாயஉத்தரவின்படி மாசு கட்டுப்பாடு வாரியம் தமிழகம் முழுவதும் கேன் தணணீரில் மாசு கலந்துள்ளதா என்பது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து தீர்ப்பாயம் மாசுகட்டுப்பாடு வாரியத்துக்கு கண்டனம் தெரிவித்தது.
கடந்த ஜூலை 22ல் தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவின்படி மாவட்ட தலைமை சுற்றுச்சூழல் அதிகாரிகள், தண்ணீர் தயாரிக்கும் நிறுவனங்களில் ஆய்வு நடத்த வேண்டும். பி.ஐ.எஸ் தர சான்றிதழ் பெற்று இயங்கும் நிறுவனங்கள், சான்றிதழ் பெறாத நிறுவனங்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இது குறித்த எந்த அறிக்கையும் நீதிமன்றத்தில் அதிகாரிகள் தாக்கல் செய்யவில்லை. இதுகுறித்து நீதிபதி சொக்கலிங்கம் கூறுகையில், வழக்கு தொடர்பாக அடுத்த விசாரணை யில் கண்டிப்பாக அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். அறிக்கை தாக்கல் செய்யாத பட்சத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலருக்கு 1 லட்சம், மாவட்ட அளவிலான மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கு அபராதமாக தலா 50 ஆயிரம் செலுத்த உத்தரவிட்டார். விசார ணையை செப்டம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment