Aug 21, 2013

15ஆயிரம்போதைபாக்குகள் அழிப்பு

கோத்தகிரி, ஆக.21:
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் தடை செய்யப்பட்ட பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்களை தாராள மாக விற்பனை செய்யப்படுவது குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதார துணை இயக்குநர் டாக்டர் பானுமதி தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் மணிகுண்டன், சுகாதார ஆய்வாளர்கள் குமாரசாமி, பிரேம்குமார் ஆகியோர் கோத்தகிரி டானிங்டன், மார்க்கெட், பஸ்நிலையம், காமராஜர் சதுக்கம், எஸ் கைகாட்டி, நெடுகுளா ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் பல்வேறு கடைகளில் பான்ம சாலா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதில் டானிங்டன் பகுதி கடையில், தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து, ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பான்மசாலா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அவற்றை கோத்தகிரி பேரூராட்சி அலுவலக செயல் அலுவலர் பழனி முன்னிலையில் தீயிட்டு அழித்தனர்.
இதுகுறித்து டாக்டர் பா னுமதி கூ றுகையில், தடை செய்த புகையிலை பொரு ட்களை குறித்து தொடர்ந்து நடத்தப்படும். இதில் வியாபாரிகள் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு கடை உரிமமும் ரத்து செய்யப்படும். தவிர தடை செய்யப்பட்ட பொருட்களை வாங்கி உபயோகப்படுத்துபவர்கள் மீதும் அபராதம் விதிக்கப்படும் என்றா.

No comments:

Post a Comment